அனைவருக்கும் பிடித்தமான ஜாக்கி சான் சாகசங்கள் மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது.

90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் பலவிதமான நினைவுகள் உண்டு. அவை அனைத்தும் தற்போது இல்லையே என்று வருத்தப்பட்டதும் உண்டு. அதிலும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ் கண்டு ரசித்த பல கார்ட்டூன்கள்  தற்போது ஒளிபரப்பப்படுவதில்லை. அப்படி பலருக்கும் பிடித்தமான ஜாக்கிசானின் சாகசங்கள் தற்போது மீண்டும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

இந்த கார்ட்டூன்-இன் சிறப்பம்சம்மாக  அருமையான அனிமேஷன், மந்திரக்கல் மீதான அளவில்லாத மோகம், அருமையான திரைக்கதை என பல கூறி கொண்டே சென்றாலும் சிறு குழந்தைகளுக்கு தேவையான நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் ஒழுக்க கருத்துகளும்  ஆங்காங்கே இணைக்கப்பட்டிருப்பது தான்.

இப்படியான நல்ல கார்ட்டூன் மீண்டும் நாளை முதல் தினம்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் சுட்டி டிவியில் பழையபடி ஒளிபரப்பப்பட இருக்கிறது. நாம்  கண்டு ரசித்த அந்த சாகசங்கள் வித்தியாசமான 12 மந்திரகற்கள், 10 முகமூடி , 8 அரக்கர்கள்  கதைகள் என தரமான பொழுதுபோக்கை மறுபடியும் காண தயாராகுங்க.