
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், பார்முலா-4 கார் ரேஸ் இந்த நேரத்திலே இதை நடத்த வேண்டிய அவசியம் என்ன ? இந்த அரசு விளம்பர அரசு…. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவந்தவாரிலே பள்ளியிலே மாணவர்கள் தண்ணீர் குடிக்கின்ற…. அதுவும் 90% மாணவர்கள் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்…. அந்த தண்ணீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக புகார் கொடுக்கப்பட்டது. அதை தீர விசாரிக்காமல் மாவட்ட ஆட்சியாளர்,
தண்ணீர் தொட்டியை இடித்து இருக்கின்ற எவிடன்ஸ் முழுவதையும் அழித்திருக்கிறார். விசாரிக்கப்படவில்லை… விசாரணை செய்யவில்லை.. ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை….. இதை மறைத்து இருக்கிறது… ஏற்கனவே தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவடையவில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை… மற்றொன்று காஞ்சிபுரத்திலே இது போல சம்பவம் நடந்திருக்கிறது.
இப்படி தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கின்ற நிகழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியம்…. நீலகிரியில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு யார் பாதிப்பானர்களோ, அந்த சிறுமியை கைவிலங்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அனைத்து செய்திகளிலும், ஊடகங்களிலும் செய்தி வந்திருக்கிறது என திமுக அரசை விமர்சனம் செய்தார்.