ஐக்கிய அரபு அமீரகத்தில் பருந்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை 2002 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இது மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். இந்த பாஸ்போர்ட் கொண்டு பக்ரைன், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு பருந்துகள் விமானத்தில் பயணிக்க இயலும். Falconry என்ற வேட்டை விளையாட்டுக்காக வளர்க்கப்படும் மருந்துகளுக்கு அங்கு ராஜ மரியாதை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.