செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரும்பேடு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடியில் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் வெங்கடேசன் வீட்டில் இருந்து விழுப்புரத்திற்கு வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் வெங்கடேசனை புதுசேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மனைவி எழிலரசி கடலூர் நீதிபதியாக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.