மானிய விலையில் உளுந்து, பச்சைபயிறு விதைகள் வழங்கப்படுவதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் உளுந்து, பச்சை பயிறு விதைகள் வழங்கப்படுவதாக உதவிய இயக்குனர் விஜயகுமார் தெரிவித்து இருக்கின்றார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நீடாமங்கலம் வட்டாரத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 45 ஆயிரத்து 682 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றது.

நெல்லுக்கு பின்னர் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்கள் திட்டத்தினை உழவர் நலத் துறை மூலம் செயல்படுத்தி இருக்கின்றது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கிலோவுக்கு 50 அல்லது 48 ரூபாய் மானிய தொகையில் விதைகளை பெற்றுக் கொள்ள முடியும். ஆகையால் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல்களை காட்டி நீடாமங்கலம், வடுவூர், கருவாக்குறிச்சி, தேவங்குடி வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.