போடி, நடுக்கோட்டை பகுதிகளில் நான்காம் தேதி மின் தடை செய்யப்படுகின்றது.
தேனி மாவட்டத்திலுள்ள போடி துணை மின் நிலையத்தில் வருகின்ற நான்காம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், குரங்கனி, போடி நகர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படுகின்றது. இதனை போடி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்திருக்கின்றார்.
இதுபோல ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் தர்மத்துப்பட்டி, ராஜப்பன் கோட்டை, தாதனூர், நடுக்கோட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகின்றது. இதனை பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்து இருக்கின்றார்.