ஈரோடு மாவட்டத்திலுள்ள மைக்கேல் பாளையத்தில் இருக்கும் பள்ளியில் ஈரோடு மாவட்டம் குன்னூரை சேர்ந்த ராஹித்(25) என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் ஜீவா(40) நேற்று ஜீவாவும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஜீவா ராஹித்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு என்னுடைய வீட்டில் இதை விரும்ப மாட்டார்கள் என கூறி ராஹித் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஜீவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஹித்தின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.
இதனால் ரத்தம் வெளியேறி ராஹித் வலியில் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்து தப்பியோட முயன்ற ஜீவாவை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஜீவாவை கைது செய்தனர். இதற்கு இடையே பொதுமக்கள் ராஹித்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.