2008 ஆம் வருடம் தனது 18 வயதில் கூலி தொழிலாளியாக டெல்லி வந்தவன் தான் ரவீந்தர் குமார். போதை பொருளுக்கு அடிமை ஆனா ரவீந்தர் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளான். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் சிக்கும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து இறுதியாக கொலையும் செய்து விடுவான். 2008-ல் தொடங்கிய இந்த கொடூர செயல் 2015-ல் ரவீந்தர் போலீசில் சிக்கும் வரை தொடர்ந்துள்ளது.

7 வருடங்களில் 6 முதல்  12 வயதிலான 30 குழந்தைகளை கொடூரன் ரவீந்தர் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளான். அறியா குழந்தைகளை மிட்டாய் வாங்கி தருவதாக ஏமாற்றி அழைத்து சென்று வன்கொடுமை செய்ததோடு தன்னை அடையாளம் காட்டி விடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்களை கொன்று வீசுவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.

ஏழு வருடங்களாக இத்தகைய கொடூர செயலை செய்து வந்த ரவீந்தர் 2015 ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை கடத்திய சம்பவத்தில் டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட போலீசார் அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என காத்திருக்கின்றனர். இவர் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கிற்கு இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க இருக்கிறது. 30 குழந்தைகளை கொன்ற கொடூரன் ரவீந்தர் குமாருக்கு என்ன தண்டனை கிடைக்கிறது என பார்க்கலாம்.