ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் ராம்கஞ்ச் மண்டி அருகே உள்ள குதாயலா கிராமத்தில் கோட்டா கற்கள் மெருகூட்டும் தொழிற்சாலை கழிவுகள் சேமிக்கப்படும் வயல் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் எதிர்பாராதவிதமாக ஈரமான கழிவுச் சகதிக்குள் சிக்கிக்கொண்டனர்.
राजस्थान : कोटा में स्टोन फैक्ट्रियों से निकलने वाली पॉलिश स्लरी के दलदल में फंसे तीन बच्चे
◆ दो घंटे की मेहनत के बाद लोगों ने साड़ियों की मदद से बचाई बच्चों की जान#Rajasthan | Rajasthan | Kota | #Kota pic.twitter.com/e0uuj6yNoE
— News24 (@news24tvchannel) December 28, 2025
கற்களை மெருகூட்டும்போது வெளியேறும் கழிவுகள் காய்ந்த பிறகு சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதற்காகப் பெரிய பரப்பளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மேல்பரப்பு காய்ந்திருந்தது போன்ற தோற்றத்தை நம்பி உள்ளே சென்ற சிறுவர்கள் ஆழமான சேற்றில் புதையத் தொடங்கினர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் சாதுரியமாகச் செயல்பட்டு சேலைகளைப் பயன்படுத்தி அவர்களைப் பத்திரமாக மீட்டனர். முன்னதாக இந்தக் கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது சிமெண்ட் தயாரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதால் விளைநிலங்களை வாடகைக்கு எடுத்து இந்தக் கழிவுகள் சேமிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
