அதிர்ச்சியூட்டும் உணவுப் பரிசோதனையாக, மும்பையைச் சேர்ந்த ஹீனா கௌசர் ராட் என்ற பெண் ‘பிரியாணி ஐஸ்கிரீம்’ என்ற விசித்திரமான உணவைத் தயாரித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார். தனது பேக்கிங் அகாடமியில் ஏழு நாள் பயிற்சியை முடித்த மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த புதுமையான முயற்சியை அவர் மேற்கொண்டார்.

மேலும் காரசாரமான பிரியாணியின் மேல் இளஞ்சிவப்பு நிற ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் உருண்டைகளை வைத்து அவர் பரிமாறிய வீடியோ, இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விசித்திரமான கலவைக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by س🐁🧿🧞 (@babasood)

“>

இதனை பலர் “பிரியாணியின் புனிதத்தைக் கெடுக்க வேண்டாம்” என்றும், “இணையத்தில் பிரபலமாவதற்காக இப்படிப்பட்ட மோசமான பரிசோதனைகளைச் செய்யாதீர்கள்” என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வினோத உணவை ருசித்த தனது நண்பர்கள் மற்றும் ரூம்மேட்கள் இதற்கு ஒப்புதல் அளித்ததாக அந்தப் பெண் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.