நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலை மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான CUET – UG 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக  NTA அறிவித்துள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CUET UG 2024 தேர்வு மே 15 முதல் 31ஆம் தேதி வரை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.