மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு CUET நுழைவுத் தேர்வு கட்டாயம். இந்த நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இதற்கான கால அவகாசம் மார்ச் 30ம் தேதி அதாவது இன்றுடன் முடிவடைகிறது. இன்று  இரவு 9.50 மணி வரை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாடு முழுவதும் அதிகமானவர்களா எழுதப்படும் இந்த தேர்வு மே 21 மற்றும் மே 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.