சென்னை அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்துள்ளது..

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணிக்கு ஐபிஎல் லீக் 29-வது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதுகிறது. சென்னை அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு) மற்றும் 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

அதேபோல மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான் மற்றும் லக்னோவிடம் தோல்வியடைந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஹைதராபாத் 5 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்க உள்ளது..

சென்னை சூப்பர் கிங்ஸ் :

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ரஹானே, சிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பத்திரனா, ஆகாஷ் சிங்.

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் :

ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, மார்க்ரம் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே,  உம்ரான் மாலிக்.