இந்தியாவின் முன்னாள் மூத்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், வளர்ந்து வரும் நட்சத்திரங்களான ரின்கு சிங் மற்றும் மன்தீப் சிங் மீது சாடியுள்ளார்..

நேற்று வியாழன் அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர், ஒட்டுமொத்த அணியும் 20 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ரின்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் நிறைய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார், ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக, அவர் 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மந்தீப் சிங்கும் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிக மோசமான ஷாட் ஆடி விக்கெட்டை இழந்தார்.

இந்த இரு பேட்ஸ்மேன்களின் செயல்பாடு குறித்து யுவராஜ் சிங் ஏமாற்றம் தெரிவித்தார். இந்த நிலையில் மன்தீப் சிங் மற்றும் ரின்கு சிங் ஆகியோரை நினைத்து நான் மகிழ்ச்சியடையவில்லை என்று யுவி ட்வீட் செய்துள்ளார். உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பது முக்கியமில்லை.விக்கெட்டுகள் விழும் போது, ​​பார்ட்னர்ஷிப்களை உருவாக்க வேண்டும். 15வது ஓவர் வரை, நீங்கள் ஒருநாள் கிரிக்கெட் போல் கிரீஸில் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் இறுதியில் உங்களுக்காக ஆண்ட்ரே ரசல் விளையாட வர வேண்டும் என்றார்.

டெல்லியின் வெற்றி :

யுவராஜ் சிங்கின் கோபம் நியாயமானது, ஏனெனில் ரின்கு சிங் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் இன்னிங்ஸை சிறப்பாக முடிக்க வாய்ப்புகள் இருந்தன, ஆனால் இருவரும் மோசமான ஷாட்களை விளையாடி தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். முதலில் பேட் செய்த கேகேஆர் 20வது ஓவரின் கடைசி பந்தில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.