ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால், மே 28ஆம் தேதி மழை பெய்த காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்த போட்டி ரிசர்வ் நாளான நேற்று (29ஆம் தேதி) நடைபெற்றது. திங்கள்கிழமை டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மழை பெய்ததால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ரவீந்திர ஜடேஜா மோகித் ஷர்மாவின் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து திரில் வெற்றியை உறுதி செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டது. எனினும் நள்ளிரவு வரை நடைபெற்ற இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெற்றுள்ளது. இதன்மூலம் மும்பையை சமன் செய்துள்ளது சென்னை அணி..ஐபிஎல் தொடரின் இரண்டாவது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கவில்லை.

திட்டமிட்டபடி, இந்த இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், அன்று ஒரு பந்து கூடவீசப்படவில்லை. இதன் விளைவாக, போட்டி ஒதுக்கப்பட்ட நாளில் அதாவது திங்கள்கிழமை (மே 29) நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஷுப்மான் கில் மற்றும் விருத்திமான் சாஹா ஜோடி மீண்டும் அரை சதத்துடன் அணியை துவக்கியது. கில் 39 ரன்களும், சாஹா 54 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், குஜராத்தின் இன்னிங்ஸின் நாயகன் இளம் வீரர் சாய் சுதர்சன். அவர் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். அவரது பங்களிப்பால் குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

இந்தப் போட்டியில் குஜராத் அணிக்காக சாய் சுதர்சன் அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் விருத்திமான் சாஹா 54 ரன்கள் எடுத்தார். ஷுப்மான் கில் 39 ரன்களும், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 21 ரன்களும் எடுத்தனர்.  சென்னை அணியில் அதிகபட்சமாக பத்திரனா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் சாஹர் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை அணியில் அதிகபட்சமாக கான்வே 47 ரன்கள் எடுத்தார், ஆனால் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக பங்களித்தனர். ருதுராஜ் 26 (16) ரன்களும், கான்வே 47 (25) ரன்களும், ரஹானே 27 (13) ரன்களும், ராயுடு 19 (8) ரன்களும் எடுத்தனர். துபே 32 (21) ரன்களுடனும், ஜடேஜா 15 (6) ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

குஜராத் தரப்பில் மோகித் சர்மா 3 விக்கெட்டுகளையும், நூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக இறுதிப் போட்டியில் வென்றது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

கடைசி ஓவரில் மாஸ் காட்டிய ஜடேஜா :

மோகித் சர்மா அபாரமாக பந்துவீசி சென்னை அணியை அழுத்தத்தில் ஆழ்த்தினார். கடைசி ஓவரில் 13 ரன்களை பாதுகாக்கும் போது முதல் 4 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து சென்னைக்கு ஐந்தாவது பட்டத்தை பெற்றுத் தந்தார்.இந்தப் போட்டியில் தோனி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், போட்டியை முடிக்கும் பொறுப்பை வேறொருவர் ஏற்க வேண்டும், தோனியுடன் பத்தாண்டு காலம் விளையாடி தான் கற்றுக்கொண்டதை ஜடேஜா காட்டினார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஜடேஜா மைதானத்தில் ஓட பின் தல தோனி ஆனந்த கண்ணீருடன் ஜடேஜாவை தூக்கினார்.. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.