சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஏப்ரல் எட்டாம் தேதி மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட்டுக்கான விலை குறைந்தது 1700 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பேடிஎம் மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.