சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்க தாகூர் தனது எக்ஸ் (x) பக்கத்தில் அதிரடியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பாஜக ஆசைப்பட்டபடி விஜய் முதலமைச்சராவதைத் தடுக்க வேண்டும் என்ற திமுகவின் திட்டம் தோல்வியடைந்ததால் தான், தற்போது திமுக இளைஞரணி தங்களையும் ராகுல் காந்தியையும் குறிவைத்து தீர்மானங்களையும் நாடகங்களையும் அரங்கேற்றி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK – ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது.
Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask… https://t.co/gc1ELfaaJY
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 23, 2026
“>
மேலும், தமிழக மக்கள் திமுகவின் உண்மையான முகத்தைப் பார்த்துவிட்டார்கள் என்றும், ஐயுஎம்எல் , விசிக, சிபிஎம் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களே திமுகவின் திரைமறைவு வேலைகளை அம்பலப்படுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளஅவர், தங்களை எவ்வளவு தாக்கினாலும் உண்மை மாறாது என்றும் மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
