அரசியல் கட்சிகள் தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்களை அழிப்பதாக பாஜக எம்.பி வருண் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.பி வருண் காந்தி இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது வாக்காளர்களை அவமதிப்பது போன்றது என்றும் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் சாடினார்.

இலவசங்கள் பெறுவது உரிமை போல் மாறிவிட்டது என்றும் அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து அளித்து தொட்டில் முதல் கல்லறை வரை இலவசங்கள் இருக்கும் மாநிலத்தை உருவாக்குகின்றனர் என வேதனை தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் எல்லா திட்டங்களையும் வாக்குறுதிகளையும் இலவசமாக கருத முடியாது என்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை இலவசம் என்று சொல்ல முடியாது எனவும் கருத்து தெரிவித்தார் மேலும் இலவசங்களை அளிப்பதற்கான நிதி ஆதாரம் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தெரிவிப்பதை கட்டாயமாக வேண்டும் என அவர் கூறினார்.