அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அன்புக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.