சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசி உள்ளதாவது, கருமந்துறையில் வேளாண்மை கட்டிடம் வாடகை கட்டிடத்தில் தான் செயல்படுகின்றது. அங்கு பல பண்ணைக்கு சொந்தமான இடம் இருக்கின்றது. இந்த இடத்தில் வேளாண் துறைக்கு சொந்தமாக கட்டிடம் கட்ட வேண்டும்.

தலைவாசல் கால்நடை பூங்கா வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்கப்படுவதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. இது அமைந்தால் நிலத்தடி நீருடன் மண் வளமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது. ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கருமந்துறையில் சிறுதானியங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இதனை விற்பதற்காக ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. ஆகையால் கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.