தென்காசி மாவட்ட வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் இருக்கும் தனியார் சிப்ஸ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது வாழைக்காய் சிப்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றின் மாதிரிகளை எடுத்து உணவு பகுப்பாய்வு கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் சிப்சில் அதிகப்படியான செயற்கை வண்ணம் கலந்திருந்ததும், குறைந்த பாதுகாப்பற்ற உணவு பொருள் என்பதும் தெரியவந்தது.

இதனால் சிப்ஸ் தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர மாவட்ட நியமன அலுவலர் மூலமாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அனுமதி கூறப்பட்டது. இதனை தொடர்ந்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் செங்கோட்டை மாதேஸ்வரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி தனியார் சிப்ஸ் நிறுவன உரிமையாளர் பிலிப் ஜான் ஜோசப்புக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும், கோர்ட் கலையும் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.