கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் செட்டிகுளத்தில் மதுரையைச் சேர்ந்த அப்துல் கலாம் ஆசாத் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருடன் கணேசன், சதீஷ், சரவணன், சந்திரசேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோரும் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு அப்துல் கலாம் உள்ளிட்ட 6 பேரும் கடையில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்து மது கடையில் அதனை கொடுத்து மது வாங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவிலில் இருக்கும் 2-வது கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சதீஷ், அப்துல் கலாம், சரவணன், சந்திரசேகர் ஆகிய 4 பேருக்கும் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டனர். வழக்கு நடைபெற்ற போது கணேசனும், சௌந்தர பாண்டியனும் இறந்துவிட்டனர்.