சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டி நகர் முதலாவது தெருவில் அஜித்குமார்(23) வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு அஜித் குமாரின் மனைவி மகாலட்சுமி தனது பிறந்தநாளுக்கு தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார். எனவே அஜித்குமார் தனுடன் பணியாற்றிய வேல் விழி என்பவரிடம் கடனாக பணம் கேட்டுள்ளார். அவர் பணம் இல்லை என கூறினார். அதற்கு அஜித்குமார் கம்மல், மோதிரத்தை கொடுத்தால் அடமானமாக வைத்து பணம் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

அதற்கு வேல்விழி மறுத்ததால் கோபமடைந்த அஜித்குமார் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து தங்க நகைகளை கொள்ளை அடித்தார். மேலும் வேல்விழியின் உடலை சாக்கு கையில் வைத்து தீயணைப்பு நிலையம் அருகே வீசி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.