ஜெர்மனி நாட்டில் நிலவிய அதீத வசதிகளும் பாதுகாப்பான வாழ்க்கை முறையும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தியதால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேற முடிவு செய்துள்ளதாக இந்திய மற்றும் ஜெர்மனி தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

தீபேஷ் படேல் எனும் அந்த நபர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஜெர்மனியில் தங்களுக்குக் கிடைத்த பொருளாதார நிலைத்தன்மையும் சமூகப் பாதுகாப்பும் வாழ்க்கையை ஒரே சீரான ஓட்டத்தில் இயங்க வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

குளிரான வானிலை அல்லது கடுமையான அரசாங்க விதிமுறைகள் காரணமாகத் தாங்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் மாறாக வாழ்க்கையில் சவால்களும் மாற்றங்களும் இல்லாததால் ஒரு இயந்திரத்தனமான சூழல் உருவானதே இதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கியுள்ளார். இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் தங்களுக்குப் புதிய பார்வையை வழங்கும் என்பதால் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தம்பதியரின் முடிவை வரவேற்றுள்ள இணையவாசிகள் பலர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவது மகிழ்ச்சியான விஷயம் என்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.