ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “கூலி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, கேரள மாநிலம் பாலக்காட்டில் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘கூலி’. சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், “கூலி” திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகியது. கூலி திரைப்படம் முதல் நாளில் சுமார் ரூ. 140 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ரூ. 30 கோடியும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ.65 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 75 கோடி வரை வசூலித்திருக்கிறதாம். அடுத்த 3 நாள்கள் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
