அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரவான் குடி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு ரத்தினசாமி பெரம்பலூரில் இருக்கும் தனியார் வங்கி கிளையில் 53 ஆயிரம் ரூபாய்க்கு வாகன கடன் வாங்கினார். இதனையடுத்து மாதம் 2800 ரூபாய் வீதம் 24 தவணைகளாக ரத்தினசாமி பணத்தை செலுத்தி விட்டார். கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வங்கி தரப்பில் கிருஷ்ண சாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில் மொத்தம் 31 தவணைகள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள 19 ஆயிரத்து 838 ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே வருடம் அக்டோபர் மாதம் வங்கியில் இருந்து அனுப்பப்பட்ட மற்றொரு நோட்டீஸில் 20,708 ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து தவணைகளையும் ரத்தினவேல் செலுத்தி விட்டார்.

ஆனாலும் வங்கியில் இருந்து தொடர்ந்து அறிவிப்புகள் வந்ததால் ரத்தினசாமி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரத்தினசாமிக்கு 30 நாட்களுக்குள் தடையில்லா சான்று வழங்க வேண்டும் நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.