செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, சேரி பகுதியில் உள்ள அனைவரும் முன்னேறி விட்டார்கள். அனைவரும் சமம் என்று நிலைக்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் நீங்கள் சேரி என குறிப்பிடும் போது அவர்களை பின் நோக்கி…. ஏற்கனவே இருந்த இடத்தில் இருப்பது போல் இருக்குமே என்ற கேள்விக்கு,

எப்படி இருக்க முடியும் ?  நான் தான் சொன்னேன்…. புரிஞ்சிக்காதவங்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும் ? நான்  சேரி   sarcasm ( கிண்டல் ) பிரெஞ்சுல loveable ( அழகு ) என அர்த்தம்.  எப்போதுமே என்னுடைய ட்விட்ல கொஞ்சம் sarcasm ( கிண்டல் ) இருக்கும். அதை யாருமே இல்லைன்னு சொல்ல முடியாது.

எனக்கு தெரிஞ்ச பாசையில் நான் பேசவேன். நான் எதற்கு  வேற பாஷையில் அவுங்களுக்கு சொல்ல வேண்டும். நான் கேட்கிறேன் எந்த பாஷையில் பேசினாலும்,  நான் பேசலாம் இல்லையா ? அதுக்கு ஒருத்தன் வந்து டிஎம்கேல இருந்து ரொம்ப தகாத வார்த்தை என்னை  பேசிட்டு,  அதுக்கு பிறகு அதை உடனே டெலிட் பண்ணிட்டாங்க.

ஒரு பெண்ணை பார்த்து இவ்வளவு பெண்ணை பார்த்து இவ்ளோ அசிங்கமா பேசுறவங்களை பார்த்து காங்கிரஸ் கேள்வி கேட்க வக்கில்லை. நான் ஒரு வார்த்தை பேசினதுக்கு இவ்வளவு ஆக்ரோஷமா பேசிட்டு இருக்காங்க.  திரௌபதி முர்மு அவர்கள் நம் நாட்டினுடைய ஜனாதிபதியாகும் போது…..  தீய சக்தி என்ன சொன்னவுங்க இந்த காங்கிரஸ்காரங்க…

ராஷ்டிரபதி என்றால் கேவலமான வார்த்தையை பயன்படுத்திய இந்த காங்கிரஸ்காரங்க…  ஏன் தலைக்கு தானே பாரத ரத்னா கொடுத்த நேருவும், இந்திராகாந்தியும் இருக்காங்க.. இவர்களுக்காக போராடின  அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வாங்கி கொடுத்தது யாரு ?  அப்ப இந்த காங்கிரஸ்காரங்க உட்கார்ந்தாங்களா ? பேசுனாங்களா?

சென்டர்ல 60 வருஷம் நீங்க ஆட்சியில் இருந்தீர்கள்…. அப்போ ஏன்  பாதர ரத்னா விருது அம்பேத்காருக்கு  வாங்கி கொடுக்கல….  குஷ்பு மேல கொக்கி வைத்திருந்தால் நின்னா… மத்தவுங்க கேட்பாங்க…. பிரஸ் வரும்… பப்ளிசிட்டி வரும்…  இதே காங்கிரஸ் கட்சிக்காரர்களை பார்த்து நான் கேட்கிறேன்….  யார் எனக்கு எதிரா போராட்டம் நடத்துறாங்களோ ?  அவர்களை பார்த்து கேள்வி கேட்கிறேன்.

நீட்டுக்காக என்கிட்ட கேள்வி கேட்டீங்க இல்ல… அறிவுப்பூர்வமான கேள்வி… ஆனால் 2017-இல் அவங்க கட்சியில் தான் இருந்தேன்,  அது கூட அவங்களுக்கு தெரியல…  காங்கிரஸ்ல தான் இருந்தேன்.. அப்போ ஏன் இந்த கேள்வி கேட்கல. இதே நீட்டுக்காக நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட் வாசல்ல உக்காந்துட்டு.  நல்ல கத்துனாங்க…  நீட்டு நீங்க எடுக்கவே முடியாது… நீட் இருக்கத்தான் செய்யும்ன்னு சொன்னாங்க. அப்போ ஏன் பா.சிதம்பரம் வீட்டின் வாசலில் நீங்கள் போராட்டம் செய்யல ?

ஏன் அப்ப மட்டும் கேள்வி கேட்கல ? இவ்வளவு நாளா விவசாயிங்க  போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… ஏழு பேர் குண்டர்  சட்டத்தில் தூக்கி போட்டாங்க. அதுல ஒரு தாயார் குழந்தை இறந்துடுச்சி 16ஆம் நாள் காரியம் பண்ணனும் விட்டுவிடுங்க என கதறி அழுகிறார்கள்…. அதுக்கு மட்டும் குரல் கொடுக்க காங்கிரசுக்கு வக்கு இல்லை. ஆனால் குஷ்பூ வந்தா… உடனே வந்துருவாங்க, எனக்கு புரியல என தெரிவித்தார்.