தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் தன்னுடைய மேற்படிப்பை முடித்த நிலையில் தற்போது குறும்படங்களை இயக்கி வருகிறார். ரேசன் சஞ்சையை பல முன்னணி இயக்குனர்கள் ஹீரோவாக்க முயற்சி செய்தாலும் அவர் படம் இயக்குவதில் மட்டுமே உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷா தற்போது தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துள்ளார். அவருக்கு பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்ட நிலையில் திவ்யா தன் அண்ணனிடம் பள்ளி சான்றிதழை கொடுத்துள்ளார். அப்போது சஞ்சய் திவ்யாவுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/vjfouzyHaasan/status/1662461315850424320?s=20