புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லத்திகா(29) என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட லத்திகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

ஆனாலும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் லத்திகா விஷ இலையை தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று லத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.