மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து, பரவலான வெள்ளம் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில்,   பாதிப்பில் இருந்து மீண்டு வர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் மக்களிடையே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்,

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து திமுக எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த முயற்சிக்கு தொழில்துறை நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல்வேறு துறைகளில் இருந்து பரவலான ஆதரவைப் பெற்றது.

இந்நிலையில் சிறுமி ஒருவர்,  உண்டியலில் சேகரித்த பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியது பலரது பாராட்டை பெற்றுள்ளது.  இதுகுறித்து தனது X தளத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின், நெல்லையில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் #CMPRF-க்குக் கொடுத்த சிறுமி! நெகிழ்ந்தேன்; நெஞ்சம் நிறைந்தேன்!

#மனிதம்காப்போம்! என பதிவிட்டுள்ளார்.