சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசினார். தவெக அரசுப் பொறுப்பேற்று நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையும் சூழலில் நடந்த இந்தச் சந்திப்பில், சமீபத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அறிக்கையை முதலமைச்சரிடம் அன்புமணி முறைப்படி சமர்ப்பித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை அரசு உடனடியாக நடத்த வேண்டும்; வரும் ஜூன் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்த்தப்படவிருக்கும் ஆளுநர் உரையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அரசாணையையும் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் அதிரடிக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் தவெக-வின் ஒரு மாத கால ஆட்சி குறித்துப் பாராட்டிய அன்புமணி, “தமிழகத்தில் தற்பொழுது பெரிய அளவில் நிறைய இடங்களில் ஊழல் குறைந்துள்ளது, பல நல்ல மாற்றங்கள் வந்துள்ளன; இன்னும் முழுமையான மாற்றத்திற்கு நாம் 2, 3 மாதங்கள் வரை அரசுக்கு நேரம் கொடுக்க வேண்டும்” என்று பாசிட்டிவ் சான்றிதழ் கொடுத்துள்ளார். அதேசமயம், தற்போதைய மின்வெட்டுப் பிரச்சினைக்குக் கடந்த 5 ஆண்76ķ¼ĺdďlrrrrrrrrrrrடுக்கால திமுக ஆட்சியே காரணம் என்றும், அவர்கள் எந்த ஒரு புதிய ŕ கொண்டு வரவில்லை என்றும் சாடினார். மேகதாது அணை விவகாரம் தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினை என்பதால், இது தொடர்பாக உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு முதலமைச்சரிடம் அவர் வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பயங்கர ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
