எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள்.  I.N.D.I.A கூட்டணியினர் சமூக வலைதளங்களில் கையாளும் விதம். இது மட்டுமில்லாமல் ஊடகங்களை கையாளுவதற்கு துணைக்குழு  அமைக்கப்பட்டுள்ளது.

பிரச்சனைகள் என்பது ? விலைவாசி உயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் ஊழல் இதுதான்.  முதல் பிரச்சினையாக நிறுத்த போறாங்க. அதைத்தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பது என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் பாரதி ஜனதா கட்சி பல்வேறு சூழ்நிலைகளில் கேஸ்ட்  இன்ஜினியரிங் என்று சொல்வார்கள்…  சமூகங்களை ஒருங்கிணைத்து அதை  பாரதிய ஜனதா கட்சி அப்படித்தான் பல இடங்களில் ஆட்சி அமைத்திருக்கிறது.

ஏற்கனவே ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய சமூகங்களை விடுத்து,  மற்ற  ஆதிக்கம் பெறாத அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைப்பது தான் பாரதிய ஜனதாவின் வேலையாக… செயல்பாடாக இருந்து இருக்கிறது. அப்படித்தான் மகாராஷ்டிராவில் ஆதிக்கமாக இருந்த சமுதாயமான மராத்தா  சமுதாயத்தை விடுத்து,  மற்ற சமுதாயத்தை ஒருங்கிணைத்தார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் அப்படியான விஷயங்கள் நடந்தது.  பிற்படுத்தப்பட்ட வகுப்பில் யாதவ் சமுதாயம் கை மேலோங்கி இருந்த சூழ்நிலையில் மற்றவர்களை ஒருங்கிணைத்தார்கள். தற்போது வலுவான நிலையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கின்றார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் அப்படியான யுக்திகளை அவர்கள் கையாண்டார்கள் இந்த யுக்திகளை கையாளும் பொழுது, ஜாதிவாரி கணக்கெடுப்பு அந்த யுக்திகளை  முறியடிக்கும் என்று இந்தியா கூட்டணியினர்…. கூட்டணி கட்சியினர் ஒரு கணக்கு போடுகிறார்கள்.

ஏனென்றால் நமக்கு தற்போது இருக்கின்ற கணக்கு, பலம், எண்ணிக்கை. இது தெளிவான ஒரு புள்ளி விவரம் இல்லைஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது…  இந்த புள்ளி விவரங்களை தெளிவுபடுத்தும். யாருக்கு உண்மையிலேயே அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் ? யாருக்கு நலத்திட்டம் சென்று சேர வேண்டும் ? அப்படி என்ற ஒரு தெளிவை கொண்டு வரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  எனவே  சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்தியா கூட்டணிக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கும் என அவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த நான்கு,  ஐந்து விஷயங்களை தான் முதல் கட்டமாக அவர்கள் எடுத்து, அடுத்த கட்டமாக எடுத்து  செல்வது என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்,  அதற்கான முடிவுகள் எடுத்திருக்கிறார்கள்.