உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் இருக்கும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திரை நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸை கொண்டாடி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

மடோனா செபாஸ்டியன்

அந்த வகையில் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழில் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். இதனை அடுத்து லியோ படத்தில் மடோனா விஜயின் தங்கையாக நடித்திருந்தார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சிம்ரன்
வாலிபர்களின் கனவு கனியாக வலம் வந்த நடிகை சிம்ரன் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு சிம்ரன் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி அகர்வால்
வளர்ந்து வரும் அடியான சாட்சியா அகர்வால் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அபர்ணா தாஸ்
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அபர்ணா தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு கவின் உடன் இணைந்து நடித்த டாடா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது அபர்ணா சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.