செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நேற்று முன்தினம் போயிருந்தேன். அங்கு கூடிய மக்களை சந்தித்தேன். அவர்களுக்கு ஒரு சில பகுதிகளுக்கு எல்லாம் என்னை கூட்டிட்டு போனாங்க… அங்க தண்ணி வடியாமல் இருந்துச்சு. உடனே மோட்டார்கள் அங்கு அதிகமாக வர வைக்கப்பட்டு, அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டிருக்கு.

நேற்று முன் தினம் அந்த பகுதி மக்களுக்கு தான் ஆய்வு செய்திருந்தேன்.  நேற்று காலை ஏரல் பகுதிக்கு போயிருந்தேன்….  இந்த இரண்டு பகுதிகளில் தான்….  காயல்பட்டினத்தில் மிக அதிக கனமழை……  அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது ஏரல் பகுதி தான். ஏரல் பேரூராட்சி தான்….  நம்முடைய நகராட்சி அமைச்சர் நேரு அவர்களை இன்று அங்க போயி ஆய்வு செய்ய சொல்லி இருக்கிறேன்….

அரசு அதிகாரிகள்…..  நம்முடைய சிறப்பு திட்ட செயலாளர்கள் அங்கு தான் முகமிட்டு இருக்கிறார்கள்…. அமைச்சர்கள் அண்ணன் மூர்த்தி அவர்கள்….  அங்கு பொறுப்பு அமைச்சராக  கொடுக்கப்பட்டிருக்கிறார்… நான் மீண்டும் நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் செல்ல இருக்கின்றேன்…  கண்டிப்பாக மக்களுடைய நிவாரண பணிகளை நாங்கள் கொள்வோம் என தெரிவித்தார்.