இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த ஒரு மாதத்தில் நாடு முழுவதும் விமான நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் 18 ஆயிரத்து 600 பிஎஸ்ஐ தர குறியீடு இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொம்மைகள் இறக்குமதிகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.