பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதிலாக, மின்சாரம், பச்சை ஹைட்ரஜன், எத்தனால் மற்றும் பயோ-சிஎன்ஜி போன்ற மலிவான விருப்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலைச் செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் 50 ஆயிரம் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டமாக ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. இவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானியத்தில் வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த சேவை தொடங்கும் என நம்பப்படுகிறது. EV சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளது.