பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காவல்துறையினரின் தீவிர நடவடிக்கை குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது, குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் அது தொடர்புடையவர்கள் இதுவரையிலும் 1800-க்கும் அதிகமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளார்.