டெல்லி ரயில் பவனில் சென்ற 1ம் தேதி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது “நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் உள் நாட்டிலேயே தயாரிக்கப்படும் எனவும் அந்த ரயில் முதல் முறையாக புகழ்பெற்ற கால்கா-ஷிம்லா மலைரயில் பாதையில் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஹைட்ரஜன் ரயில்கள், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய தீங்கு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதில்லை. டீசல் ரயில்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஹைட்ரஜன் ரயில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. பிற ரயிலுடன் ஒப்பிடும்போது ஹைட்ரஜன் ரயிலானது சிறியதாக இருக்கும். அதில் 7 முதல் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்தார்.