தேனி மாவட்ட மக்களின் பல நாள் கனவான சென்னை- போடி ரயில் சேவை ஜூன் 16-ஆம் தேதி தொடங்கும் என தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து போடிக்கும் மதுரையில் இருந்து போடிக்கும் ஜூன் 16-ஆம் தேதி ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை ஜூன் 15-ஆம் தேதி மத்திய அமைச்சர் எல். முருகன் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.10 மணிக்கு மதுரையை சென்றடையும். மதுரையில் இருந்து 7.15 மணிக்கு கிளம்பும் ரயில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக காலை 9.35 மணிக்கு போடியை சென்றடையும். இதேபோன்று மறு மார்க்கத்தில் போடியிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.45 மணிக்கு மதுரையை சென்றடையும். இங்கிருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:55 மணியளவில் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.