நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் 288 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா ரயில் விபத்தில் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சிவசங்கர் உட்பட அதிகாரிகள் குழு ஒடிசா சென்றனர். இன்று சென்னைக்கு திரும்பிய அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அமைச்சர் உதயநிதி ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம் என்று கூறினார். அவர்களுடன் சென்ற அதிகாரிகள் குழு ஒடிசாவில் இருக்கிறார்கள். இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க வேண்டும். மேலும் அதற்கான முழுமையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி கூறினார்.