சென்னை மாவட்டத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனயைில் பிறந்த 23 நாட்கள் ஆன ஆண் குழந்தைக்கு நடைபெற்ற அமியாண்டின் குடலிறக்க அறுவை சிகிச்சை அம்மருத்துவமனையின் மருத்துவர்களால் வெற்றிகரமாக செய்யப்பட்டது. மேலும், உலகில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே இந்த வகையான குடலிறக்கம் காணப்பட்டது. தற்போது 28 வாரத்தில் பிறந்த ஆண் குழந்தை உலகில் நான்காவதாக இந்த வகையான குடலிறக்கத்துடன் பிறந்துள்ளது. மேலும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை மருத்துவர்கள் துல்லியமாக பொது மயக்கம் மருந்து கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
குறை மாதமாக பிறந்த இந்த குழந்தைக்கும் எல்லா குழந்தை போலவும் உள்உறுப்புகள் வளர்ச்சி அடையாத நிலையில் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. குழந்தையின் மிருதுவான தசைகளில் சேதங்கள் ஏற்படாத வகையில் மிக துல்லியமாக இந்த அறுவை சிகிச்சை எஸ்.ஆர்.எம் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் பொதுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு குழந்தை குணமடைந்து நல்ல நிலைக்கு திரும்பியது. மேலும் எல்லாக் குழந்தைகளைப் போலவும் உடல் எடை அதிகரித்தும் வருகிறது.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பி. சத்திய நாராயணன் கூறியதாவது, இந்த சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு வெற்றி பெற்ற மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், NICU மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு எங்கள் மருத்துவமனைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உலகில் இந்த குடலிறக்கத்துடன் மூன்று குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் நான்காவது குழந்தையை தங்களது மருத்துவக் குழு திறன் பட செயல்பட்டு உயிரை காப்பாற்றி உள்ளது என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து டாக்டர் சரவண பாலாஜி கூறுகையில், குழந்தை உயிருக்கே ஆபத்தான நிலையில் NICUவில் 23 நாட்களாக இருந்தது மேலும், குழந்தைக்கு வலது அங்குவினாஸ் கிராடல் வீக்கம் இருந்தது. இந்த நிலையில் நாங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். பிறந்த குழந்தைகளின் பொதுவான குடல் இறக்கத்தை ஒப்பிடுகையில் அமியாண்டின் மிகவும் அரியது. இந்த குடலிறக்கங்கள் அமியாண்டின் 0.1% மட்டுமே ஏற்படுகிறது என கூறியுள்ளார்.