இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் ஒரு புது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் அட்டகாசமான வீடியோக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. அதன்படி சிறுவன் ஒருவன் தனக்குத்தானே சாண்ட் விச்செய்து சாப்பிடும் க்யூட்டான ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அடுப்பின் மீது சிறிய தோசை கல்லை வைத்து சிறுவன் அருகில் அமர்ந்து சமையல் கலைஞர் போன்று உடை அணிந்து கொண்டு ரொட்டியை ஸ்டைலாக அதில் போட்டு பிரட்டி எடுக்கிறான். மற்றொரு பக்கம் முட்டை ஒன்றை உடைத்து ரொட்டி அருகிலேயே ஊற்றி மேலே கெட்சப்பை ஊற்றி புரட்டிப்போட்டு ரொட்டியை இரண்டாக பிரித்து அதனுள் தான் போட்ட ஆப் பாயிலை வைத்து இறுதியில் சாப்பிட தொடங்குகிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.