கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூர் அருகே தொட்டகன்னஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த கங்கியா சூபா (22) என்ற இளம்பெண், அவரது காதலியான பூர்வா லேஷ்பா (24) என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிக்கிமில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது டார்ஜிலிங்கைச் சேர்ந்த பூர்வா மற்றும் கங்கியா இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூருவிற்கு வந்த இவர்கள், திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். பூர்வா ஹோட்டலிலும், கங்கியா சலூன் கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று அதிகாலையில் பார்ட்டி முடித்துவிட்டு கங்கியா வீட்டிற்கு வந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கங்கியாவுக்கு வேறொருவருடன் பழக்கம் இருப்பதாகச் சந்தேகமடைந்த பூர்வா, உடனடியாகத் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் கங்கியா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூர்வா, சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து கங்கியாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் கங்கியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தப்பியோடிய பூர்வாவை ஒயிட்பீல்டு போலீசார் அதிரடியாகக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் வேறொரு வாலிபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் இருப்பது தெரிய வந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு காதலன் வற்புறுத்த அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இந்த கொலை அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
