நிலவின் தென் துருவத்தை ஆராயும் பொருட்டு 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 3 திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக 2020 ஆம் ஆண்டு இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவ தயாராக உள்ளது.

அனைத்து விதமான சோதனைகளும் முடிக்கப்பட்டு விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள சந்திராயன் 3 விண்கலம் சரியாக இன்னும் ஒரு வாரத்தில் அதாவது ஜூலை 14ஆம் தேதி மதியம் 02:45 மணிக்கு ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 தோல்வியடைந்த நிலையில் இந்த விண்கலம் வெற்றிவாகை சூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.