ஆர்பிஐ வங்கியின் விதிகளை பின்பற்றாத வங்கிகள் மீது தொடர்ந்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக hdfc, hsbc வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படும் இரண்டு கூட்டுறவு வங்கிகளின் உரிமைகளை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அதன்படி, தெலுங்கானாவை சேர்ந்த மல்காப்பூர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் மற்றும் பெங்களூரை சேர்ந்த சுஷ்ருதி சௌஹர்தா சககர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளுடைய உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த இரண்டு வங்கிகளிலும் எந்த விதமான டெபாசிட் ஏற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. உரிமம் ரத்து  செய்யப்பட்ட இந்த வங்கிகளில் எந்த ஒரு வணிகத்தையும் செய்ய வேண்டாம் என்று இந்த வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.போதிய மூலதனம்  மற்றும் வருவாய் ஈடன் திறனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் அமைப்பிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை டெபாசிட்  கோரிக்கை தொகை பெற உரிமை உண்டு என்று அறிவித்துள்ளது.