இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இன்றைய தலைமுறையினர் பார்த்ததும் காதலித்து உடனே திருமணம் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு ஏதாவது சிறிய பிரச்சனை என்றாலும் உடனே வாக்குவாதம் இறுதியில் விவாகரத்து என சென்று விடுகிறார்கள்.

இவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் காணொளியை தற்போது இந்த பதிவில் காணலாம். இங்கு வயதான தம்பதிகள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதில் பாட்டி ஒருவர் தன்னுடைய கணவருக்கு அருமையாக ஊட்டி விடுவது மட்டுமல்லாமல் அவருக்கு குழந்தை போல வாயை நன்றாக துடைத்தும் விடுகிறார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.