கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில்வே ரோடு பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிப்-டாப்பாக உடை அணிந்த ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அந்த நபர் தன்னை வடசேரி பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். இதனால் முருகேசன் அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் வெள்ளாளர் தெரு அருகே சென்றபோது என்னை இங்கேயே இறக்கி விடுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் குமரேசன் மோட்டார் சைக்கிளை நிறுத்திய உடன் அந்த நபர் குமரேசனின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து குமரேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.