கரூர் மாவட்டம் அத்திபாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் அத்திப்பாளையம் கிராமத்தில் ஆடுகளை சிறுத்தை கடித்துள்ளது. கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக நான்கு கூண்டுகள், மூன்று வலைகள் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த அதிவிரைவு படையினர் அத்திப்பாளையம் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர்.

மேலும் இரவு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாட்டத்தால் மாலை நேரத்திற்கு பிறகு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தள்ளனர். ஆட்டுப்பட்டிகளில் இரவு முழுவதும் விளக்குகளை எறிய விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொது மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள 5 கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுத்தை பிடிப்பதற்கான பணிகளை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.