ஹரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார், சண்டிகரில் உள்ள தனது அரசு இல்லத்தில் அக்டோபர் 7 அன்று தனது சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்த ஐபிஎஸ் அதிகாரி, தனது தற்கொலை கடிதத்தில் ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் உள்ளிட்ட 8 மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக பாகுபாடு காட்டி, மனரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
हरियाणा के IPS अधिकारी वाई पूरन कुमार जी ने बीते दिनों जातिगत उत्पीड़न के चलते आत्महत्या कर ली थी।
आज नेता विपक्ष श्री @RahulGandhi ने चंडीगढ़ में वाई पूरन कुमार जी के परिवार से मुलाकात कर, उनका दर्द बांटा।
ऐसी घटनाएं देश और समाज पर कलंक हैं और इस बात का सबूत हैं कि आज वंचित… pic.twitter.com/rVSQ3eTqHe
— Congress (@INCIndia) October 14, 2025
இதனால், அவரது மனைவியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான அம்னீத் குமார், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளின் பெயர்களை எஃப்.ஐ.ஆர்-இல் சேர்க்க வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, டிஜிபி சத்ருஜீத் கபூருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பூரன் குமாரின் குடும்பத்தினரை சண்டிகரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பதிவில், இத்தகைய சாதி ரீதியான துன்புறுத்தல்கள் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ள கறையாகும் என்றும், தாழ்த்தப்பட்டோர் மீதான நம்பிக்கை இழப்புக்கு இது சான்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் வெறுப்பு மற்றும் மதவாத சிந்தனைகள் சமூகத்தை விஷமாக்கி, மனிதநேயத்தை அழித்து வருவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
