மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், வயது குறைந்த ஒரு சிறுவன் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரை மோதியதுடன், வாகனத்துடன் ஒரு வீட்டுச் சுவரில் மோதிய  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் இருந்து ஒரு பசு மயிரிழையில் தப்பியதுடன், சுவரும் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள உள்ளூர்வாசிகள், 14–15 வயதுள்ள சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோரின் செயல் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

“>

 

மேலும், சிறுவனின் தாயார், “என் மகன் தான் ஓட்டுவான், உன்னால் என்ன முடியுமோ செஞ்சுக்கோ” என உரைத்ததாக கூறப்படுவதால், மக்களில் கடும் கோபம் எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பை மறந்த இந்த செயலுக்கு எதிராக, சிறுவன் மற்றும் அவரது பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்களில் மத்தியப் பிரதேசம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது, 1,138 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.இத்தகைய அபாயங்களை ஏற்படுத்தும் முக்கியக் காரணம் பெற்றோரின் மேற்பார்வை இல்லாமையே என புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.